Vellalur Nadu History
மதுரையில் உள்ள கள்ளர்நாடுகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது வெள்ளளூர் நாடு! ஆங்கிலேயரை எதிர்த்து 5ஆயிரம் கள்ளர்கள் தங்கள் இன்னுயிரை ஈர்ந்த புண்ணிய பூமி ! இது வடக்கு வேள்விநாடு வீரபாண்டியநல்லூர் ஆகிய வெள்ளூர்நாடு என்றும் கூறப்படும். உள்ளடங்கிய கிராமங்கள் (மாகாணம்) வெள்ளளூர்,அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி,குறிச்சிப்பட்டி, மலம்பட்டி ஆகியவையாகும்! _______________________________________ நாட்டில் உள்ள கரைகள் 1.முண்டவாசிகரை 2.வேங்கைபுலிகரை 3.சம்மட்டிகரை 4.நைக்கான்கரை 5.சாய்படைதாங்கிகரை 6.வெக்காலிகரை 7.சலிப்புலிகரை 8.திருமான்கரை 9.செம்புலகரை 10.கோப்பன்கரை 11.மழவராயன்கரை ஆகிய பதினோரு கரைகளை உள்ளடக்கியது வெள்ளூர் நாடு. கரையொன்றுக்கு இருகரையம்பலங்கள் உண்டு.நாட்டுத்தலைவர் நாடு முழுமைக்கும் தலைவர் ஆவார்.இந்நாட்டில் ஏழைகாத்த அம்மன்,வல்லடியான் கோயில் என இரண்டு கோயில்கள் உண்டு.இந்நாட்டினர் வெள்ளை மலைக்கள்ளர் அல்லது வெள்ளூர் நாட்டார் எனப்படுவர்.மாகாணக் கூட்டம் என்பது ஒரு அம்பலமும்,குடிகளும் கூடுவது.நாட்டுக்கூட்டம் என்பது நாட்டுத்தலைவரும்,இருபத்திரண்டு கரையம்பலங்களும்,மற்றைக்குடிகளும் கூடுவது.நீதி (சிவில்) ...